தமிழ் நாடு இந்து வியாபாரிகள் சங்கம் 9.3.25 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் மாநில தலைவர் S. ஈஸ்வரன் தலைமையில் குரும்பூர் கிளை சங்கம் அழகப்பபுரம் (குரும்பூர்) சமுதாய கூடத்தில் வைத்து துவங்கப்பட்டது.
விழா ஏற்பாடு மாநில துணை செயலாளர் முத்துராஜ், குரும்பூர் கிளை செயலாளர் பாபு, கிளை தலைவர் மாதவன், கிளை பொருளாளர் ராஜா, சட்ட ஆலோசகர் சரவணன் ஆகியோர் முன்னெடுத்தனர்.
கௌரவ ஆலோசகர்கள் திருஞானம், பரிசமுத்து, துணை தலைவர்கள் சிவகுமார், பாலமுருகன், துணை செயலாளர்கள் ஆனந்த்குமார், தர்மேஸ்வரி, சின்னத்துரை ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் மாநில பொருளாளர் வேல்முருகாண்டி, முத்தையபுரம் தலைவர் தனராஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தமிழ் நாடு இந்து வியாபாரிகள் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி யில் 29.12.2024 ஞாயிறு காலை 11 மணியளவில் மாநில தலைவர் செ. ஈஸ்வரன் தலைமையில் கிளை சங்கம் அமைக்கப்பட்டது.
கிளை சங்க தலைவராக V. சாமதுரை, செயலாளர் ஜெய்சங்கர், பொருளாளர் முத்துகுமார் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.
முன்னிலையில் மாநில பொருளாளர் வேல்முருகான்டி, மாநில துணைச் செயலாளர்கள் முத்துராஜ், சுதிஷ்குமார், திருச்செந்தூர் கிளை செயலாளர் பிரித்விராஜ், இடைச்சிவிளை சுந்தரவேல் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் வியாபாரிகள் பெருமளவில் கலந்து சிறப்பித்தார்கள்.
வணிக சந்தைகளை உருவாக்கும் வாய்ப்பு
சமூக மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் நேரடி பங்கேற்பு
சட்ட, நிதி மற்றும் வணிக ஆலோசனைகள் பெறும் சேவைகள்
தமிழ் நாடு இந்து வியாபாரிகள் சங்கம், அதன் உறுப்பினர்களின் தொழில் முன்னேற்றம் மட்டுமின்றி, சமூக மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
சங்கத்தில் இணைந்து, வணிகத்தில் புதிய உச்சங்களை அடையவும், பாரம்பரியமும், நவீனத்தையும் ஒருங்கிணைக்கவும் முடியும்.
மாநில துணை செயலாளர் சுதிஷ்குமார், திருச்செந்தூர் மீனாட்சிநாதன், பிரித்விராஜன், மற்றும் பெருவாரியான உறுப்பினர்கள் கலந்து கொண்டு, தர்மப்படி வியாபாரம், அரசு, அரசு அதிகாரிகளுக்கு மதிப்பு, தூய்மை, நமது ஒற்றுமை குறித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
தூய்மை பணியாக பிரித்விராஜன் தலைமையில் கால்வாயை தூய்மைப்படுத்தி, மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு படைத்துறை மற்றும் சுவர் கட்டித்தர வேண்டுகோள் வைத்தார்கள்.